Monday, August 14, 2017

மிக விரைவில் ன்ஷாஅல்லாஹ்..

Saturday, March 25, 2017

C.I.A பற்றிய விக்கிலீக்ஸின் இணையவேவுகள்...!

பெருகிச் செல்லும் எண்ணிக்கையில் ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும், அமெரிக்காவின் மூர்க்கமான வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவியரசியல் எதிரிகளான ரஷ்யா மற்றும் சீனாவின் “ஊடுருவல்” மற்றும் “இணைய-வேவு” நடவடிக்கைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பதிலிறுப்புகளாக பூசி மெழுகி வருகின்றன.

Friday, March 24, 2017

ஜப்பானிய இராணுவ செயற்பாடுகளும் ஆசிய களங்களும்.....

ட்ரம்ப் நிர்வாகம் வட கொரியாவுடன் அதன் மோதலை அதிகரித்து, அப்பிராந்தியம் எங்கிலும், குறிப்பாக சீனாவுடன் பதட்டங்களை உயர்த்துகின்ற நிலையில், ஜப்பானிய அரசாங்கம் அதன் இராணுவ நடவடிக்கைக்களை குறிப்பிடத்தக்களவில் விரிவாக்கி வருகிறது. அமெரிக்கா உடனான அதன் மூலோபாய கூட்டணியின் குடையின் கீழ் செயல்படுகின்ற போதினும், டோக்கியோ அதன் சொந்த ஏகாதிபத்திய அபிலாஷைகளை பின்தொடர்வதற்காக இராணுவரீதியில் மீள்ஆயுதமயமாவதற்கு இந்த வாய்ப்பைச் சாதகமாக்கி வருகிறது.

அமெரிக்கா தென் கொரியாவிற்கு டிரோன்களையும் கொலைப் படைகளையும் அனுப்புகிறது....

ட்ரம்ப் நிர்வாகம் தென் கொரியாவிற்கு தாக்கும் டிரோன்களை அனுப்பியும் மற்றும் ஏற்கனவே நடந்து வரும் பாரிய போர் ஒத்திகைகளில் பங்கெடுக்க சிறப்புப்படை பிரிவுகளை அனுப்பியும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அதீத பதட்டமான விட்டுக்கொடுப்பற்ற நிலையை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது. வட கொரியாவின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் தொடுக்க வெள்ளை மாளிகை பரிசீலித்து வருகின்ற நிலையில் தான், இந்த இராணுவ ஆயத்தப்பாடுகள் நடக்கின்றன.

புலம்பெயர் தமிழ் தேசியவாத குழுக்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ட்ரம்புடன் உடன்பாட்டுக்கு முயலுகின்றன..

மீபத்திய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் (UNHCR) அமர்வுகளின் போது, இலங்கை அரசாங்க போர் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணைகளை மீண்டும் தொடங்க வேண்டுமென வாஷிங்டன் மற்றும் ஏனைய பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு முறையிடுவதற்காக, புலம்பெயர் தமிழ் குழுக்கள் ஜெனிவாவிற்கு பிரதிநிதிகளை அனுப்பின.

மனித உரிமை மீறல்கள் விசாரணையை ஜனாதிபதி சிறிசேன கண்டனம் செய்வதன் பின்னணியில்.....

லங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணையை நடத்த சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை  (யு.என்.எச்.ஆர்.சி.) உயர் ஸ்தானிகர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்தார். அந்த அறிவித்தல் வந்து இருபத்தி நான்கு மணி நேரம் முடிவதற்குள், ஜனாதிபதி சிறிசேன வியாழக்கிழமை அதை நிராகரிப்பதாக ஸ்ரீ.ல.சு.க. மத்திய குழு கூட்டத்தில் பெருமையாக கூறிக்கொண்டர்.

Tuesday, January 31, 2017

அமெரிக்க சிலுவைத் தளபதியின் சீனப்பார்வை.....

தவியேற்று சில நாட்களில், ட்ரம்ப் நிர்வாகமானது இராணுவ மோதல்கள் மற்றும் போருக்கு அச்சுறுத்துகின்ற வகையில் தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடனான ஒரு மோதலுக்கு பாதை அமைத்திருக்கிறது.